Pages

Sunday, March 15, 2015

குறும்படம் எடுக்கலாம் வாங்க...!

http://dcinemaproduction.blogspot.fr/


ஒன்னுமில்லீங்க, அதோட பெயர்லேயே விசயம் இருக்குங்க.குறுகிய காலத்தில ஓடக்கூடிய படம்.உதாரணமா ஒரு நிமிட படம் அல்லது அதற்கு குறைவான நேரத்துல ஓடக்கூடிய படம் அல்லது ஐந்து நிமிடம், பத்து நிமிடம் இப்படி குறுகிய காலத்தில் ஓடக்கூடிய படங்கள குறும்படம்முன்னு சொல்லுவோம். ஏன் குறும்படங்கள் பன்றோம் அப்படீன்னா. முழு நீள படங்களுக்கு நேரம் அதிகம் பொருட் செலவும் அதிகம் ஆனா குறும்படத்துல அப்படி இல்ல குறைந்த பொருட்செலவுலயும் நல்ல விசயங்கள நறுக்குன்னு சொல்லமுடியும். அதே சமயம் குறும்படங்கள்ல மிக அதிக பொருட் செலவுல எடுத்த படங்களும் உண்டு.





 
 நண்பர்களே,
இதர துறைகளையும் பார்த்துவிடுவோம்.

 ஒப்பனை...!


மேக் - அப் நடக்கிறது

           மேக் - அப் இது மிகவும் முக்கியம்.அழகாக காட்டுவதற்குமட்டுமல்ல,இயல்பான கதாப்பாத்திரத்தை திரையில் தத்ரூபமாக காட்டுவதற்கும் என்றால் மிகையாகாது.நவநாகரிக நங்கைமுதல் புராண கதாப்பாத்திரங்கள்வரை இவர்களின் கைவண்ணம்தான்.மேக் - அப் ஆர்ட்டிஸ்ட்டுகளின் பங்கு இத்துறையில் பெரும்பங்கு.



 கலை...!


இது ஆர்ட் டைரக்டர்களின் கைவண்ணம்.மிக பிரம்மாண்டமான் செட் - கள் எல்லாம் இவர்கள் மனசு வெச்சாத்தான்.


திட்டமிடுதல்



பிரம்மாண்டமான செட்



க்ளாடியேட்டர் படத்தில் போடப்பட்ட ஒரு செட்



திறந்தவெளியில் போடப்பட்ட ஒரு பிரம்மிப்பூட்டும் செட்





சிறப்பு காட்சி தோற்றம்...!





டெர்மினேட்டர் படத்தில் ஒரு காட்சி



ஸ்பெசல் எஃபெக்ட் செய்பவர்கள்,இவர்கள் தில்லாலங்கடி வேலைக்காரர்கள்.துப்பாக்கி குண்டு வெடித்து சிதறுவது,தலை தனியாக கிடப்பது,ராட்சஸ உருவங்களை உருவக்குவது போன்ற வித்தைக்காரர்கள்.









 
சி.ஜி...!


           கம்ப்யூட்டர் வித்தைக்காரர்கள்.நம்ம ஊர் மோடி வித்தைக்காரர்கள் போல இருப்பதை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்,இல்லாதததை கண்முன் காட்சியளிக்க வைப்பார்கள் பலே கில்லாடிகள்


க்ளாடியேட்டர்




 ஜுராஸிக் பார்க்




 ஜூமான்ஜி




சிறப்பு சப்தம்...!
           இவர்கள் பாவம் ஒலிப்பதிவு கருவிகளை எடுத்துக்கொண்டு விமான நிலையம்,பேருந்துநிலயம்,காடுகளில் திரியும் விலங்குகளின் பின்பு என பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து ஒலிக்குறிப்புகளை பதிவு செய்யும் மகத்தான மாவீரர்கள்.



ஒரு சைக்கிளின் ஒலியை பதிவுசெய்கிறார்கள்


தண்ணீர் அலம்பும் சத்தம் பதிவு செய்யப்படுகிறது


காலணிகள் எழுப்பும் சத்தம் பதிவு செய்யப்படுகிறது



ஒரு கார் எழுப்பும் சத்தம் பதிவு செய்யப்படுகிறது



          
சண்டைப்பற்சி...!
இவர்களை சண்டைக்காட்சிகளுக்குமட்டும் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கவேண்டாம்.பல கடினமான காட்சிகளை படமாக்கும்போது திட்டமிடுதல் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப சமாச்சாரங்களுக்கும் பயன்படுத்துவார்கள்.


ஸ்பைடர்மேன் படத்தில்



ஒரு சண்டைக்காட்சி நிபுணரின் உதவியுடன் காட்சி விளக்கப்படுகிறது



ஒரு சண்டைக்காட்சி



படப்பிடிப்பில்


  
நடன அமைப்பாளர்...!

            பாடல் காட்சிகளை படமாக்க இவர்கள் உதவுவார்கள்.குறும்படம் எடுக்க இவர்கள் உதவி தேவை பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.









உடையலங்காரம்...!


           ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்கள் உடைகளின்மூலமாக நிறய தகவல்களை பார்வயாளனுக்குள் பதிய வைக்கிறார்கள்.அதற்கு இந்த காஸ்ட்யூம் டிஸைனர்களின் உழைப்பு அவசியம்.



இப்படித்தான் படமாக முதலில் வரைந்துகொள்வார்கள்



காஸ்ட்யூம் டிஸைனர்



வடிவமைக்கப்பட்ட உடைகள்



வடிவமைக்கப்பட்ட உடைகளுடன் நடிகர் டாம் - படம் - காஸ்ட் அவே




பின்னணி குரல்...!

           சில நேரங்களில் நடிகர்களின் வாயசைப்புக்கு ஏற்ப குரல் கொடுக்க வேண்டியிருக்கும்,இதற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகளின் குரல் தேவை அல்லது நடிகர்களே அவர்களது குரலில் டப்பிங் பேசிவிடுவர்.பாடவேண்டியிருந்தால் ப்ளேபேக் சிங்கர்களின் பங்கேற்பு தேவைப்படும்



டப்பிங் ஆர்ட்டிஸ்ட்



டப்பிங் ஆர்ட்டிஸ்ட்




ப்ளேபேக் சிங்கர்




இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒன்று உள்ளது அதுதான் தயாரிப்பு,தயாரிப்பவரை தயாரிப்பாளர் என்று நாமறிவோம்.சில நேரங்களில் இயக்குனரே படத்தை தயாரிப்பதும் உண்டு.

இப்பொழுது நமக்கு ஓரளவு துறைசார்ந்த அறிமுகம் கிடைத்துவிட்டது என்று நம்புகிறேன்,எனவே நாம் இனி திரைக்கதை பற்றி சற்று விரிவாக பார்த்துவிடலாம் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்...!


தயாரிப்பு முறைகள் பற்றி பார்க்கும் முன் திரைக்கதை பற்றி ஒரு சில முக்கிய குறிப்புகளை தர விரும்புகிறேன்,அதை மட்டும் பார்த்துவிடுவோமா நண்பர்களே...!
     நல்லது,

  முதலில் கதையின் நோக்கம் என்ன என்று முடிவு செய்துவிடுங்கள்.
கதையை எங்கே ஆரம்பிக்கப்போகிறீர்கள் எங்கே முடிக்கப்போகிறீர்கள் என்பது முக்கியம்.
இந்தக்கதையில் நீங்கள் பயன்படுத்தப்போகும் இடம்,பொருட்கள்,காட்ட விரும்புவது,மறைக்க விரும்புவது ஆகியவற்றை முடிவுசெய்துகொள்ளுங்கள்.

   அடுத்து ஒரு நடிகரை திரையில் காட்டுகிறீர்கள் என்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒருகாட்சியை காட்டுதல் கூடாது.










   நீங்கள் காட்டப்போகும் நடிகரை அருகில் காட்டப்போகிறீர்ககளா,தொலைவிலா,அருகிலா,மிக அருகில் காட்டப்போகிறீர்களா என்பதில் தெளிவு வேண்டும்.




   கதைக்கு தேவைப்படும் முக்கிய நடிகர்களை மட்டும் காட்டுவது அவசியம்.




  கதை எந்த இடத்தில் நிலைத்துள்ளது என்பது முக்கியம் உதாரணமாக,ஜுராஸிக்பார்க் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்துமே டைனோசர்களால் சூழப்பட்ட அந்த தீவிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற இடத்திலேயே நிலைத்திருக்கும்.கதையின் சுவாரஸ்யமும் அதுதான்.

     கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு தக்க காரணம் வேண்டும்,அப்படியில்லாமல் சும்மா காலம் கடத்தும் செயலாக இருக்கக்கூடாது.கதாப்பாத்திரம் அந்த இடத்தில் இருப்பதற்கான காரணத்தை பார்வையாளனுக்கு உணர்த்துவது அவசியம்.

    சஸ்பென்ஸாக சொல்கிறேன் பேர்வழி என்று கடைசிவரை காரணத்தை சொல்லாமல் விட்டுவிடுவது மிகவும் தவறாகிவிடும்

  இன்னும் இருக்கிறது நண்பர்களே,
மீண்டும் சந்திபோம்...! 


ஒரு கதைக்கு கரு மிக அவசியம் என்று பார்த்தோம்,கருவை எப்படி கதையாக மாற்றுவது...?

உதாரணத்திற்கு
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜூராஸிக் பார்க்
படத்தை எடுத்துக்கொள்வோம்,இந்தப்படத்தின் கரு என்னவாக இருந்திருக்கும்? ஒரு டைனோசரை உருவாக்க முடிந்தால் என்ன நடக்கும்...? என்பதுதான் கரு.

சரி கரு கிடைத்துவிட்டது அடுத்து கதை வந்துவிடுமா அதுதான் இல்லை.கதைமாந்தர் யார் என்பதை முடிவு செய்யவேண்டும்,கதைமாந்தரை முடிவு செய்யும்போதே அவர்களது குணாதிசயங்களும் முடிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.

உதாரணமாக இந்தப்படத்தில் முக்கிய கதைமந்தர்களான டைனோசர்கள்,அதை உருவாக்கியவர்,டைனோசர்களிடம் மாட்டும் குடும்பம் இவ்வாறு கதைமாந்தர்களாலும், அவர்களது குணாதிசயங்களாலும் கதை நகர்கிறது,

ஆக குணாதிசயங்கள் கதாப்பாத்திரங்களை கட்டுப்படுத்துகிறது, அந்த குணாதிசயங்கள் சம்பவங்களை உருவாக்குகிறது.எளிமையாக கூறவேண்டுமென்றல்,




கரு

கதைமாந்தர்

குணாதிசயம்

கதை மாந்தர்களால்நடைபெரும் சம்பவம்

கதை

இப்படிதான் கதயை உருவாக்க வேண்டும்.

ஓரளவுக்கு,

கதை என்றால் என்ன என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்


>

நல்லது நண்பர்களே,
கதை எப்படி உருவாகும் என்பதை எளிமையாக பார்த்தோம்.சரி இந்த கதையை அப்படியே படமாக எடுக்கமுடியுமா என்றால் முடியாது.அப்புறம் என்ன செய்வது,ஆங்... அதுக்குத்தான் இருக்குது திரைக்கதை. திரைக்கதை எங்கேயோ கேட்டமாதிரி இருக்குமே.ஒண்ணுமே இல்லீங்க பாஸ் புறிஞ்சுக்கிட்டா எல்லாமே சுலபம் !
நம்ம இயக்குனர் திரு.பாக்யராஜ்அவர்கள் ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்பதை இப்ப நீங்க அவசியம் தெரிஞ்சிக்கணும். அப்ப கதைய திரைக்கதயா மாத்தணும்.வெளிநாடுகள்ல இதுக்கு தனியா ஆட்கள் இருக்கறாங்க.நம்ம ஊர்ல கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் எல்லாமே ஒரே ஆள்தான். கதைய திரைக்கதையா மாத்தினாதன் படப்பிடிப்பு நடத்தமுடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.இது முக்கியமான விசயம்.





திரக்கதை,இதுதான் ஒரு படத்தின் முதுகெலும்பு.கதைக்கும் திரைக்கதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
கதையில் சம்பவங்கள் மட்டும் உண்டு ஆனால் திரைக்கதையில் சம்பவம்,கதைமாந்தர்களின் உடல்மொழி,காட்சியமைப்பு,இசை,காமிராவின் இயக்கம் மற்றும் இதர தொழில்நுட்ப குறிப்புகளுடன் காட்சி வடிவங்களாக இருக்கும்.
அதாவது திரைக்கதை காட்சி வடிவங்களாக இருக்கும்.
கதையில் ஒற்றை வரியில் எழுதப்பட்ட ஒரு சம்பவத்தை பல பக்கங்களாக திரைக்கதையில் எழுத வேண்டியிருக்கும்.
உதாரணத்திற்கு "சென்னை மெரீனாவில் ஒரு மாலைப்பொழுது" என்று கதையில் ஒரு வரி வருவதாக வைத்துக்கொள்வோம்.அது கதையை பொருத்தவரை வெறும் ஒற்றை வரிதான்.
ஆனால் அதை திரைக்கதையாக எழுதினால் எப்படி இருக்கும் பார்ப்போமா
பொன்னிறமான மாலைப்பொழுது.நீலக்கடலும் வானமும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்கிறது.கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.ஆங்காங்கே மக்கள் கூட்டம்.சுண்டல் விற்றுக்கொண்டிருக்கும் சிறுவர்கள்.கடல் அலையில் கால்களை நனைத்து விளையாடும் பள்ளி மாணவர்கள்.பறக்கும் தட்டுகளை வீசி எறிந்து பிடிக்க ஓடும் காளையர்கள்.கட்டுமரங்களின் ஓரமாக அமர்ந்து கொஞ்சிக்கொண்டிருக்கும் காதலர்கள்.தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கும் சரக்கு கப்பல்கள்.பலூன் சுடும் டூரிஸ்ட்டுகள்.மாலை நேர நடை பயிலும் பெரியவர்கள்.தூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கம்.எறும்புகளைப்போல் ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்.
இப்படி காட்சி வடிவங்களாக இருக்கும்.இந்த காட்சி வடிவங்களை தனித்தனியாக படம் பிடித்து சேர்த்தால் மட்டுமே சென்னை மெரீனாவின் விஸ்தீரணத்தை பார்வையாளனுக்கு உணர்த்த முடியும்.
இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.


வணக்கம் நண்பர்களே !
இப்பொழுது ஓரளவுக்கு சலனப்படம் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.
நல்லது ! நாம் இனி முன் தயாரிப்பு வேலைகளில் தாராளமாக இறங்கலாம். அதற்கு முன் திரைக்கதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது மிக அவசியம். ஏனென்றால் ஒரு சலனப்படம் தயாரிப்பதற்கு பட்ஜெட் மிக அவசியம் அந்த பட்ஜெட் தயார் செய்வதற்கு திரைக்கதை அவசியம். அதில்தான் பங்கேற்கும் நடிகர்கள், துணை நடிகர்கள், இசை அமைப்பாளர், பிண்ணனி பேசுபவர்கள், கலை இயக்குனர், சிகை அலங்காரம் செய்பவர், நடன அமைப்பாளர், சண்டைப்பயிற்சி, படக்கோர்வை, வண்ணமிடுதல், பதனிடுதல், உடை அலங்காரம் இப்படி மிக முக்கியமான துறைகளின் தேவையை அறிய முடியும். அதை வைத்துதான் பட தயாரிப்பு செலவை கணக்கிட முடியும்.
மேலும் கதைக்கு தேவையான படப்பிடிப்பு தளங்களை அதாவது லொகேஷன் எவை என்பதை முடிவு செய்ய முடியும். மேலும் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்பதையும் இந்த திரைக்கதைதான் முடிவு செய்யும். அதனால் திரைக்கதை இங்கு மிகவும் அவசியமாகிறது.
திரைக்கதையை பற்றி மிகவும் சுருக்கமாக கூறிவிடுகிறேன். திரைக்கதை எழுதுவதற்கு என்று தனிப்பட்ட எந்த ஒரு விதி முறையும் இல்லை. ஆனால் திரை உலகில் பொதுவான சில வார்த்தைகள் உள்ளன, அவற்றை பயன்படுத்தினால் திரயுலகில் உள்ள அனைவருக்கும் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து விளங்கும். அவற்றை திரைக்கதயில் பயன்படுத்தும்போது உடன் பணிபுரியும் மற்ற துறை சார்ந்த வல்லுனர்கள் குழப்பமின்றி நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற பாடுபடுவார்கள்.

ஃபேட் இன்
இது ஒரு காட்சியை ஆரம்பிக்க பயன்படுத்தும் முறை. திடுமென ஒரு காட்சி ஆரம்பிக்காமல் மென்மையாக ஒரு காட்சியை ஆரம்பிக்கும் முறை.

ஃபேட் அவுட்
இது ஒரு காட்சியை திடுமென முடிக்காமல், மென்மையாக அந்த காட்சியை மறைய வைப்பது.

டிசால்வ்
ஒரு காட்சியை மற்றொறு காட்சியுடன் ஒரே நேரத்தில் இணைத்து காட்டுவது.

கட்
ஒரு காட்சியை திடுமென முடித்துவிடுவது.

கட் டூ
ஒரு காட்சி முடிந்த பின், அடுத்த காட்சியை திடுமென ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தும் பதம்.

இன்டீரியர்
உட்புற காட்சி.

எக்ஸ்டீரியர்
வெளிப்புற காட்சி.

லொகேஷன்
கதைக்கேற்ற படப்பிடிப்பு தளம்.

டே
பகற்காட்சி.

நைட்
இரவுக்காட்சி.

கேரக்டர்ஸ்
கதாப்பாத்திரங்கள்.

வாய்ஸ் ஓவர்
திரையில் வசனம் மட்டும் கேட்பது அல்லது ஒரு கதாப்பாத்திரத்தின் முகபாவத்தில் மற்றொருவரின் வசனத்தையோ, ஒலிக்குறிப்பையோ வெளிப்படுத்தும் முறை.

கட் ஷாட்
நறுக்கப்பட்ட காட்சி.

எஸ் . எஃப் . எக்ஸ்
சவுண்ட் எஃபெக்ட்ஸ்.

டாலி இன்
கேமரா முனோக்கி நகர்வது.

டாலி அவுட்
கேமரா பின்னோக்கி நகர்வது.

க்ரேன் ஷாட்
க்ரேன் பயன்பாட்டுடன் எடுக்கப்படும் காட்சி.

ட்ராலி ஷாட்
ட்ராலி பயன்பாட்டுடன் எடுக்கப்படும் காட்சி.

இன்டர் கட்
ஒரு காட்சியின் ஊடே, இடைச்செருகலாக மற்றொரு காட்சி காட்டப்படுவது.

கோண வகைகள் மற்றும், ஷாட் வகைகள் [ இவைகளை நமது பதிவுகளில் படங்களுடன் விளக்கியுள்ளோம் ]

இந்த சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படக்கூடியவை. திரைக்கதை எழுதும்போது இவற்றை பயன்படுத்தினால் அனைத்து திரைத்துறை வல்லுனர்களாலும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியும்.

உதாரணத்திற்கு ஒரு திரைக்கதை மாதிரி வடிவத்தை உங்களுக்கு அளிக்கிறேன். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.





























நண்பர்களே திரைக்கதை பற்றி சில முக்கிய குறிப்புகளை பார்த்தோம்,
இந்த
திரைக்கதையை தனித்தனி "ஷாட்" - களாக பிரித்து வரைந்துகொள்வது உத்தமம்
இது பல்வேறு குழப்பங்களை களைவதுடன்,இயக்குனர் ஒரு காட்சி திரையில் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறார் என்பதை மற்றவர்களும் உணர உதவிகரமாக இருக்கும்.

இது ஒரு ஷாட்


      இப்படி படங்களாக வரைவதை "ஸ்டோரிபோர்டு" என்று கூறுவார்கள்.இதில் நடிகர்கள் நிற்கும் இடம்,கேமரா கோணம்,கேமரா பார்க்கும் அளவு அதாவது ஆங்கிலத்தில் ஃப்ரேமிங்,காட்சி நடக்கும் இடம்,பகலா அல்லது இரவா,உள்காட்சியா வெளிப்புற காட்சியா,உடைகள்,காட்சி தொடர்ச்சி,வசனம்,படம் பிடிக்கப்படும் கேமரா,பயன்படுத்தபடவேண்டிய லென்ஸ்,வேறு ஏதாவது சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தப்போகிறோமா இப்படி பல்வேறு குறிப்புகளுடன் இருக்கும்.இன்னும் எளிமையா சொல்லனும்னா,நாம சின்னப்பசங்களா இருந்தப்ப படிச்சோமே"காமிக்ஸ்" புத்தகம் அதுமாதிரி இருக்கும்.


ஜேம்ஸ் பாண்ட்




இரும்புக்கை மாயாவி




<><><><><><><><><><>
<>
                             வசனத்துடன்<><><><><><><><><><>
படக்கதை

        ஸ்டோரிபோர்டு வரைவதற்கென்றே ஓவியர்கள் இருக்கிறார்கள்.நாமேகூட வரையலாம்.ஒரு இயக்குனர் ஸ்டோரிபோர்டு வரைந்துவிட்டார் என்றாலே அவர் படப்பிடிப்பை பற்றிய தெளிவான சிந்தனைக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

         பிறகென்ன,ஒளிப்பதிவு இயக்குனர்,நடிகர்கள்,கலை இயக்குனர்,விளக்கு அமைப்பாளர்கள் இப்படி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் எடுக்கப்போகும் காட்சிப்பற்றி தெளிவான முடிவுக்கு வந்துவிடுவார்கள்.படப்பிடிப்புக்குழுவிடம் இந்த ஒத்திசைவு மிக முக்கியம்.அப்பொழுதுதான் இயக்குனர் தான் நினைத்த இடத்தை சென்றடைய முடியும்.

        அதனால் நாளைய இயக்குனர்களான எனது நண்பர்களே,திரைக்கதை முடிவானதுடன் ஸ்டோரிபோர்டை தயார் செய்துகொள்ளுங்கள்...!

        மீண்டும் சந்திப்போம்...!


நண்பர்களே, ஒரு சலனப்படம் எடுப்பதற்கு முன்பு அதன் ஆதார துறைகளை பற்றி அறிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதால் அவற்றைப்பற்றி நாம் பார்த்தோம்.இது ஒரு சிறிய அறிமுகம்தான்.விளக்கமாக பிறகு பார்ப்போம்.
     ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்.அறிமுகம் என்பது எப்பொழுதும் கடினமாக இருந்துவிடக்கூடாது என்பதால்.
     ஆரம்பம் எளிமையாக இருந்துவிட்டால் எவ்வளவு ஆழத்திற்கு வேண்டுமானாலும் பயணிப்பது எளிது.
     மீண்டும் திரைக்கதைக்கு வந்துவிடுவொம்.துறைகளை பற்றி நமக்கு அறிமுகம் இருப்பதால் கதையை திரைக்கதையாக மாற்றம் செய்யும்போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
      திரைக்கதை என்பது காட்சி வடிவங்களாக இருக்கும்.இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் ஒரு திரைப்படத்தை திரையில் பார்க்கும்போது எதையெல்லாம் பார்த்தீர்களோ அதுதான் திரைக்கதை.இதவிட எளிமையாக கூறமுடியுமா என்று எனக்கு தெரியவில்லை.
       அதாவது திரைக்கதையை படிக்கும்போதே படம் நமது கண்களுக்குள் ஓடும்.படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.அதுதான் தெளிவான திரைக்கதை.
       சரி இதுமட்டும் போதுமா? இல்லை,எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்ற தெளிவு மிக அவசியம்.அந்த உணர்வு மட்டும் ஒரு இயக்குனருக்கு இருந்துவிட்டால் படம் ஆகா ஓகோதான்.
       தயாரிப்பாளர காலி பன்ற ஆளுங்க படப்பிடிப்பு தளத்திற்கு போனப்பிறகுதான் யோசிப்பாங்க. அது மிகப்பெரிய தவறு.
       ஒரு இயக்குனர் தெளிவா இருந்துட்டா பார்வையாளன் குழம்பமாட்டான்,பார்வையாளன் குழம்பாமல் இருந்தால் அவனுக்கு கதை புரியும்,புரிந்தால் பிடிக்கும்,பிடித்தால் ரசிப்பான்.
அப்பொழுதுதான் ஒரு இயக்குனரின் படைப்பு பார்வையாளனை எளிதாக சென்றடைந்துவிட்டதாக  அர்த்தம்.
       கதாப்பாத்திரங்கள மொதல்ல தெளிவா அறிமுகப்படுதிடனும்,இல்லன்னா குழப்பம் வரும்.எத மொதல்ல சொல்லனும், எத மறச்சு சொல்லனும், எத பார்வையாளனுக்கு கடைசிவரை சொல்லக்கூடாது என்பதில் உறுதியான திட்டத்தோட இருக்கனும்.
      எந்த இடத்துல இசை தேவை,எப்பொழுது கேமரா நகரவேண்டும்,எந்த நேரத்துல காட்சி நடந்தா பார்வையாளனுக்குள் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதிலும் தெளிவான திட்டம் இருக்கனும்.இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போலாம் அதைஎல்லாம் சொல்லிக்கொண்டே போனால் இது திரைக்கதைக்குமட்டும் என்றாகிவிடும்.
         சரி குறும்படத்திற்கான கதையை எப்படி தேர்வு செய்வது,எப்படிவேண்டுமானாலும் என்பதுதான் சரியாக இருக்கும்.உங்களது சொந்த அனுபவங்கள்,பார்த்தது,படித்தது,கேட்டது இப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் உங்களுக்கு பொறி தட்டலாம் மொத்தத்தில் கூர்மையாக கவனியுங்கள்!
        அடுத்து தயாரிப்பு முறைகள் பற்றி பார்ப்போம் நண்பர்களே !

குறும்படமாக இருந்தாலும் முழுநீள திரைப்படமாக இருந்தாலும் தயாரிப்பு முறைகள் ஒரேமாதிரிதான்.
  • முன் தயாரிப்பு
  • தயாரிப்பு
  • பின் தயாரிப்பு
இப்படி மூன்றுவிதமாக பிரித்துக்கொள்ளலாம்.முதலில் முன் தயாரிப்பு என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.
படம் எடுப்பதற்கு கதை வேண்டும்."கதை" என்பது உடனடியாக தோன்றிவிடாது அல்லவா.அதனால் கதயை எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்துகொள்வோம்.
ஒரு பெரிய தீயை உருவாக்க எப்படி ஒரு "தீப்பொறி" தேவைப்படுகிறதோ அதுபோல ஒரு கதயை உருவாக்கவும் ஒரு "பொறி" தேவை அதுதான் "கரு".
இதத்தான் ந்ம்மாளுங்க "ரூம்" போட்டு யோசிக்கிறேன் பேர்வழின்னு தயாரிப்பாளர் காசுல தண்ணியடிச்சிட்டு குப்புற கடந்து,தயாரிப்பாளர நடு ரோடுல மல்லாக்க தள்ளிருவாங்க நெறய பேர் இப்படி பண்றதால சில நல்லவங்களுக்கும் கெட்ட பேர்தான்.சரி அது தமிழ் சினிமாவோட சாபம், நம்ம விசயத்திற்கு வருவோம்.


  • ஒளி அல்லது, நமது பார்வைக்கு புலப்படும் ஒளி என்பது மின்காந்த அலைகள் என்று அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மின்காந்த அலைகளின் நீளம் 380  - லிருந்து 400 நானோ மீட்டர் முதல் 760 - லிருந்து 780 - நானோ மீட்டர் வரை இருக்கும்.
  • குறிந்த அதிர்வெண் உடைய அகச்சிவப்பு கதிர்களையும், அதிக அதிர்வெண் உடைய புற ஊதா கதிர்களையும் நமது கண்களால் காண முடியாது.
  • வெற்றிடத்தில் ஒளி பரவும் வேகம் வினாடிக்கு   சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்.
  • ஒளி மிகச்சிறிய துகள்களால்  ஆனது, இதை "போட்டான்கள்"  என்று அழைப்பார்கள். இவை துகள்களாகவும், அலைகளாகவும் செயல்படக்கூடியவை.    
  •  Intensity என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்பீர்கள். இது ஒளியின் ஆற்றலை அளவிட பயன்படும் ஒரு வார்த்தை.
கலர் டெம்பரேச்சர் 
  • கண்ணிற்கு புலப்படும் ஒளியினை அளவிட பயன்படும் ஒரு அளவு.                                                       
  • போடோகிராபி, வீடியோகிராபி, பப்ளிஷிங், மேனுபாக்சரிங்,ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், மற்றும் இதர துறைகளிலும் அளவிடுவதற்கு இது பயன்படுகிறது.
  • கலர் டெம்பரேச்சரை அளவிட கெல்வின் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. அதனால் சுருக்கமாக இதை "K" என்ற குறியீட்டால் குறிப்பிடுவார்கள்.
  • ஐந்தாயிரம் கெல்வின் - க்கு  மேல் சென்றுவிட்டால் அதனை கூல் கலர் என்று குறிப்பிடுவார்கள். ஏனென்றால் அது நீல நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் இருக்கும்.
  • இரண்டாயிரத்து எழுநூறு முதல் மூன்றாயிரம் கெல்வின் வரை உள்ள குறைந்த கலர் டெம்பரேச்சரை வார்ம் கலர் என்று குறிப்பிடுவார்கள். இது மஞ்சள் வெளுப்பாகவோ அல்லது சிவப்பாகவோ  இருக்கும்.
சில நிறங்களும் அதன் வெப்ப நிலைகளும்

          ஒளி மூலம்                 -                 வெப்பநிலை 
              தீக்குச்சி                                       1,700 K
            மெழுகுவர்த்தி,                            1,850 K
            சூரிய உதயம்,
           சூரிய அஸ்தமானம்
           வீட்டு உபயோக பல்பு             2,700 K - 3,300 K
           ஸ்டுடியோ லைட்                     3,350 K
           போட்டோ ப்ளட்                         3,400 K
           நிலவு ஒளி, செனான் ஆர்க் 4,100 K
          ஹாரிசான் டே லைட்             5,000 K
         கத்தரி வெயில்,                            5,500 K - 6,000 K
         எலக்ட்ரானிக் ப்ளாஷ்
         பகல் வெளிச்சம்                          6,500 K


ப்ரைமரி கலர்ஸ் ( முதன்மை நிறங்கள் )

  • ப்ரைமரி கலர்ஸ் என்பது நிறங்களின் தொகுதி. இது மனிதர்களின் பயன்பாட்டு வசதிக்கான ஒரு ஏற்பாடு.
  • இதை பொதுவாக RGB என்ற நிற தொகுதியாக நாம் அறிவோம் .
  • இதுவே பதிப்பகங்களில் இதழ்களை அச்சிட CMYK - அதாவது சியான், மெஜந்தா, எல்லோ, ப்ளாக். என்ற நிற  தொகுதி பயன்படுகிறது.
  • RYB - அதாவது ரெட்,எல்லோ,ப்ளூ. இது ஓவியர்களால் பயன்படுத்தப்படக்கூடியது.
  • RGB, CMYK, RYB இவைகள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட முதன்மை நிறத்தொகுதிகள்.
Opponent Process  
   மனிதனின் கண்களில் உள்ள செல்கள் நிறங்களை பரிமாறிக்கொள்ளும் முறைக்கு இந்த பெயர்.
                                   RED --------------> GREEN
                                   BLUE -------------> YELLOW
                                   BLACK------------> WHITE
இதை சைக்காலஜிகள்  ப்ரைமரி கலர்ஸ்  என்று அழைப்பார்கள் . ஏனென்றால் மற்ற நிறங்கள் இவற்றின் ஏதாவது இரண்டின் நிரக்கலவையாகத்தான்  இருக்கும். 


ஒளி விலகல்

ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்பொழுது அதிர்வெண் மாறுபடுவதால் ஒளி விலகல் ஏற்படுகிறது.


ஒளி இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது
இயற்கை ஒளி, செயற்கை ஒளி

இயற்கை ஒளி
சூரிய ஒளி
சந்திர ஒளி

செயற்கை ஒளி
செயற்கை ஒளி விளக்குகள்

ஒளியின் தன்மை
Strong light
Soft light

Strong light
நேரடியான ஒளி, அல்லது கண்ணாடி போன்ற உபகரணங்களால் குவிக்கப்படும் ஒளி. இது துல்லியமான நிழலை ஏற்படுத்தவல்லது .

Soft light
ஒளி நேரடியாக வராமல் வேறு ஒரு ஊடகத்தின் வழியாக வருவது .
சமதளம் அற்ற  பரப்பில் பட்டு வருவது. இவற்றால்  soft light வருகிறது.இது மென்மையான நிழலை ஏற்படுத்தும். 

ஒளியின் வகைகள் 
Ambient light
Icident light
Reflected light

Ambient light
இது சுற்றுப்புற  சூழல் ஒளி என்று அழைக்கப்படுகிறது. நாம் சுருக்கமாக avalable light என்று அழைக்கிறோம்.
பல்வேறு விதமான பிரதிபலிப்புகளும், ஒளி சிதறல்களும் இந்த ஆம்பியன்ட் லைட் - ஐ நமக்கு அளிக்கிறது.         

இன்சிடென்ட் லைட் 
நேரடியாக படும் ஒளி. இன்சிடென்ட் லைட் எனப்படும்
Reflected light
ஒரு பொருளின் மீது விழும் ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பை     reflected light என்று அழைக்கிறோம்.

Ambient light, Incident light, Reflected light இவைதான் ஒரு ஒளிப்படத்தை பாதிக்கும் ஒளி காரணிகள்.

ஒளியமைப்பு

கீ லைட் 

படம் எடுக்கும் பொழுது பிரதானமாக பயன்படுத்தப்படும் ஒளி.
  • கி லைட் என்பது மிக முக்கியமான ஒளி. ஏனென்றால் படம் எடுக்கப்படும் பொருளின் பரிமாணத்தை மேம்படுத்தி  காட்டுவது .
  • படம் எடுக்கப்படும் பொழுது கீ லைட் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . ஆனால் கீ லைட் இல்லாமல் படம் எடுத்தால், படம் சில்லவுட் படமாகத்தான் கிடைக்கும்.
  • நகும் பொருளை படம் எடுக்கும் பொழுது அந்த பொருள் நகர்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வழியிலேயே கீ லைட் அமைக்கப்படுகிறது .
  • கீ லைட் பல்வேறு கோண உயரங்களில் அமைக்கப்படுகிறது .
  • த்ரீ பாய்ன்ட் லைட்டிங் என்று அழைக்கப்படும்  ஒளியமைப்பில்.இந்த கீ லைட் - ஐ முப்பது முதல் அறுபது பாகை கோணத்தில் அமைப்பார்கள். அதாவது காமிராவின் பார்வை சுழி நிலை பாகையில் இருக்கும்.
  • கீ லைட் - ஐ கண் மட்டத்தில் இருந்து தாழ்த்தியோ, அல்லது உயர்த்தியோ வைக்கலாம்.
  • பொதுவாக கண் மட்டத்தில் இருந்து முப்பது பாகை உயர்த்தி வைப்பார்கள். அதாவது மூக்கி நிழல், உதட்டில் விழாமல் இருக்கும் அளவு உயரத்தில்.
  • கீ லைட் - ஐ மிகவும் தாழ்வான கோணத்தில் அமைத்தால் , படம் எடுக்கப்படும் நபர் மிகவும் விகாரமாக தெரிவார்.
  • நகைச்சுவை அல்லது திகில்  காட்சிகளை படம் பிடிக்க இந்த ஒளியமைப்பை பயன்படுத்துவர்.
  • மிக உயரத்தில் அமைக்கப்படும் கீ லைட் , மூக்கின் நிழலை  நீளமாக்கி,   கன்னத்தின் எலும்புகளை புடைப்பாக காட்டும்.
  • கீ லைட் மட்டும் பயன்படுத்தி எடுக்காப்படும் படங்கள் மிகவும் கான்ட்ராஸ்ட் ஆக இருக்கும்.
  • இந்த கீ லைட் உடன் ஒரு பேக் லைட் பயன்படுத்தி படம் எடுக்கும்பொழுது. பின்னணியிலிருந்து படம்  பிடிக்கப்படும் நபர் தனித்து தெரிவார் .
  • இந்த சமயத்தில் உங்களது காமிராவோ அல்லது படம் பிடிக்கும் நபரோ இடத்தை மாற்றிக்கொண்டால் , கீ லைட் மற்றும் பேக் லைட் அவைகளின் பணியையும் மாற்றிக்கொள்ளும்.
  • கீ லைட் படம் பிடிக்கும் நபரின் மேல் நேரடியாக படவேண்டும் அவசியம் இல்லை.
  • ஒரு பில்டர் வழியாக வரலாம்
  • திரைச்சீலை வழியாக வரலாம்
  • பிரதிபலிப்பான் மீது பட்டு வரலாம்
  • இலைகள் மற்றும் மரக்கிளைகள் வழியாக வரலாம்
  • ஜன்னல் வழியாக வரலாம்
  • இப்படி பல்வேறு தடைகளின் வழியாக வரும் கீ லைட் , பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும்.
  • கீ லைட் வெள்ளை நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பில் லைட்

  • எளிமையான த்ரீ பாய்ன்ட் லைட்டிங் கில் படத்தின் கான்ட்ராஸ்ட் குறைவதற்கு பில்  லைட்  பயன்படுத்தலாம்
  • பில் லைட் கீ லைட்டிற்கு நேர் செங்குத்து கோட்டில், காமிரா லென்சின் சுழற்சி மையக்கொட்டிற்கு இணையாக வைப்பது வழக்கம் .
  • கீ லைட் அளவை விட பில் லைட் அளவு குறைவாக இருக்க வேண்டும் .
  • ஒலிக்கும் நிழலுக்கும் உள்ள விகித அளவை மாற்றுவதன் மூலம் நாம் விரும்பிய ஒளி அமைப்பை பெறலாம் .
  • கீ லைட் ஐ விட மிகவும் குறைந்த  ஒளி மிக அதிக அளவு கான்ட்ராஸ்ட் ஐ ஏற்படுத்தும், அல்லது லோ கீ லைட்டிங் விளைவை ஏற்படுத்தும் 
  • கீ லைட் அளவில் பாதி அல்லது அதற்கும் மேற்பட்ட அளவுடைய பில் லைட் படத்தின் கான்ட்ராஸ்ட் ஐ குறைத்து ஹை கீ லைட்டிங் விளைவை ஏற்படுத்தும்
பேக் லைட்டிங்

  • படம் எடுக்கப்படும் நபருக்கு நேர் பின்னால் அமைக்கப்படும் லைட் பேக் லைட் .
  • இருண்ட பின்னணியில் படம் பிடிக்கும் பொழுது , படம் பிடிக்கும் பொருளின் விளிம்புகளை ஒளிரச்செய்யும்.
  • பின்னாலிருந்து போர் கிரவுண்டை ஒளிரச்செய்யும்
  • ஹேர் லைட், ஷோல்டர் லைட்  என்ற பெயரும் இதற்கு உண்டு.
  • கிக்கர் லைட் , ரிம் லைட் என்ற பெயர்களும் உண்டு 

நண்பர்களே,
   ஸ்டோரிபோர்டுபற்றி பார்த்தோம்.அடுத்து ஒரு ஷாட்டின் தரத்தை நிர்ணையிக்க கூடிய காரணி ஒன்று இருக்கிறது.அதை "மூட்" என்று சொல்வார்கள் அதாவது மனோநிலை.
   நீங்கள் காட்டப்போகும் ஷாட் பிரகாசமானதா,மங்கிய ஒளியில் எடுக்கப்பட்டதா,வண்ணமயமானதா,நிறமற்ற இருளா அல்லது வெளிறிய நிறமா என்பதை பொறுத்து அது பார்வையளனை பாதிக்கும்.கதை மாந்தர்களின் உணர்வுகளோடு சங்கமிக்க வைக்கும்.












     நிறங்களுக்கு ஒரு பண்பு உண்டு, அது பார்ப்பவர்களிடம் பலவித உணர்வு தூண்டுதல்களை ஏற்படுத்தவல்லது.அதனால் பார்வையாளனுக்குள் உணர்வுகளை தூண்ட நிறங்களை பயன்படுத்தலாம்.













     படப்பிடிப்பின்போது வண்ணங்களை மாற்றாவிட்டாலும் பின்தயாரிப்பின்போது சரி செய்துகொள்ளலாம்.இதைத்தான் "க்ரேடிங்" என்று கூறுவார்கள்.


 க்ரேடிங் செய்யப்பட்ட காட்சி



இப்படித்தான் க்ரேடிங் செய்வாங்க


என்ன நண்பர்களே நல்ல "மூட்" - க்கு வந்ததுட்டீங்களா.அவ்ளோதான் படம் எடுத்தரலாம் விடுங்க.மீண்டும் சந்திப்போம்!   


நண்பர்களே,
சென்ற பதிவில் மூட் பற்றி பார்த்தோம்,நல்லது!
      ஒரு இயக்குனர் ஒளிப்பதிவு பற்றிய தெளிவான சிந்தனையுடன் இருக்கவேண்டும்,ஏன் என்றால் சலனப்படம் என்பது காட்சிப்படுத்துதலுக்கான ஊடகம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா,சரி இப்பொழுது காட்சிகளை திரையில் காட்டுவதில் "லென்ஸ்" - களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
       உங்களது ஒளிப்பதிவாளர் அதையெல்லாம் பார்த்துக்கொள்வார் என்றாலும்,அவர் உங்களது கட்டளைக்காக காத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் அவரிடம் கேட்டு வாங்க வேண்டும்.
       லென்ஸ்களை பற்றி பார்த்துவிடுவோமா....!
       நார்மல் லென்ஸ்
இது ஒரு காட்சியை நமது கண்கள் பார்ப்பதுபோல இயல்பாக பார்க்கும்.


இது ஒரு நார்மல் லென்ஸ்



          இது ஒரு நார்மல் லென்ஸில் எடுக்கப்பட்ட படம்




வைட் ஆங்கிள் லென்ஸ்
இது ஒரு காட்சியின் முழு விஸ்தீரணத்தை காட்டவல்லது.பெரும்பாலும் அறிமுக காட்சிகளுக்கு இதை பயன்படுத்துவார்கள்.படப்பிடிப்பின்போது இடவசதி குறைவாக உள்ள இடத்திலும் இதை பயன்படுத்துவார்கள்.

                                               வைட் ஆங்கிள் லென்ஸ்









இதில் சூப்பர் வைட் மற்றும் ஃபிஷ் ஐ லென்ஸ்கள் உள்ளன,அவை ஒரு காட்சியை மேலும் விஸ்தீரணமாக்கி காட்டும்.சண்டை காட்சிகள் மற்றும் சிறப்பு காட்சிகளுக்கு இதை பயன்படுத்துவார்கள்.










                                         சூப்பர் வைட் லென்ஸ்





                                                                 ஃபிஷ் ஐ லென்ஸ்







ஃபிஷ் ஐ லென்ஸில் எடுக்கப்பட படம்







டெலி லென்ஸ்
இவை தூரத்தில் உள்ளக்காட்சிகளை அருகில் உள்ளதுபோல் காட்டும்.பாதுகாப்பு காரணங்களுக்காக தூரமாக இருந்து படப்பிடிப்பு நடத்துவதற்குமட்டுமல்லாமல் அழகியல் காரணங்களுக்கும் பயன்படுத்துவார்கள்.

  டெலி லென்ஸ்







டெலி லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அழகான படங்கள்








ஸ்டண்ட் காட்சியில் டெலி லென்ஸின் பயன்பாடு



ஸூம் லென்ஸ்
  இது பல்வேறு குவிய தூரங்களை உடைய லென்ஸ்.
அதாவது,நார்மல்,வைட்,டெலி - லென்ஸ் - களை பார்த்தோம் அல்லவா.அவை தனித்தனி லென்ஸ்கள்.
ஸூம் லென்ஸில் தனிதனி லென்ஸுகள் செய்த வேலைகளை ஒரே லென்ஸில் செய்ய முடியும்.அதாவது,தொலைவில் உள்ள ஒரு நபரை தொலைவிலும் பார்க்கலாம்,அருகிலும் பார்க்கலாம்,மிக அருகிலும் பார்க்கலாம்.



                                               ஸூம் லென்ஸ்


இந்தப்படத்த பார்த்தா புரியும்
ஸூம் லென்ஸ் - ல இப்படி குவிய தூரத்த மாத்தி மாத்தி படம்  எடுக்கலாம்




லென்ஸ் பத்தின இந்த அடிப்படை ஒரு இயக்குனருக்கு ரொம்ப அவசியம்.அப்பத்தான் அவர் நெனச்சத திரையில நெனச்ச மாதிரியே காட்டமுடியும்.
என்ன நண்பர்களே படம் புடிக்க கெளம்பிரலாமா.....சந்திப்போம்.....!

நண்பர்களே,
வணக்கம்,லென்ஸ் பற்றி பார்த்தோம்.அடுத்து ஷாட் - பற்றி பார்த்துவிடுவோம்.நம்மில் நிறய பேர் ஷாட் என்றால் என்ன என்ற குழப்பத்தில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
காட்சி என்பதைத்தான் ஷாட் என்று சொல்கிறார்கள்.சீன் என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் கொள்வதால்தான் இந்த குழப்பம்.சீன் என்பதையும் நாம் காட்சி என்றுதான் சொல்வோம்,ஷாட் என்றாலும் காட்சி என்றுதான் சொல்லுவோம்,அப்போ ஷாட் - என்பது உண்மையில் என்ன ?
             கேமராவில் ஒருமுறை படம் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து கேமராவை நிறுத்தியவரை எடுக்கப்பட்ட அந்த ஒரு காட்சியை ,ஒரு ஷாட் என்று கூறலாம்,அதாவது கேமராவை இயக்கும்விசையை ஒருமுறை இயக்க ஆரம்பித்ததுலிருந்து நிறுத்திய வரை ஒரு ஷாட்.
        படம் எடுக்கும்போது இதைத்தான் ஷாட் -  அப்டீன்னு சொல்லுவாங்க.நீங்க படப்பிடிப்பில் எடுத்த ஒரே ஷாட்டை எடிட்டிங் செய்யும்போது இரண்டு ஷாட்டுகளாகவோ அதற்கு மேலாகவோ அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் இரண்டு வெட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதி ஒரு ஷாட்.இந்த வார்த்தை பதம் எடிட்டிங் செய்யும் போது.
       அப்போ படம் எடுக்கும் போது ஷாட் என்பது கேமராவில் ஒருமுறை படம் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து கேமராவை நிறுத்தியவரை எடுக்கப்பட்ட காட்சி, அதே எடிட்டிங் செய்யும்போது இரண்டு வெட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதி.

        பாத்தீங்களா இதனாலதான் இந்த குழப்பம்.ஒரு முறைக்கு ரெண்டு முறை நல்லா படிச்சுக்கோங்க, சரியா !

        ஒரு கட்டிடத்திற்கு செங்கற்கல் எப்படியோ அப்படிதான் ஒரு சீனுக்கு ஷாட்.பல்வேறு ஷாட்களால் அடுக்கப்பட்டதுதான் ஒரு சீன், பல்வேறு சீன் களால் ஆனதுதான் ஒரு முழு நீள திரைப்படம்.

        ஷாட்டின் முக்கியத்துவம் என்ன என்பது இப்பொழுது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.இந்த ஷாட்டுகளை பலவிதமாக குறிப்பிடுவார்கள் அது என்னன்னு பார்ப்போமா...!

    எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்



          இது ஒரு காட்சியை வெகு தொலைவிலிருந்து காட்டுவது.பெரும்பாலும் அறிமுக காட்சியின்போது இந்த வகை ஷாட் களை பையன்படுத்துவார்கள்.ஒரு காட்சியின் விஸ்தீரணத்தை பார்வையாளனுக்கு உணர்த்தவும் இந்த வகை ஷாட்கள் பயன்படும்.

     லாங் ஷாட்




           இது தொலைவு காட்சி.ஒரு வீட்டையோ கட்டிடத்தையோ காட்டுவதற்கு பயன்படுத்தப்படும்

     மிட் ஷாட்




            இது ஒரு காட்சியை தூரமாகவும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் மத்திமமாக காட்டுவது.

      நீ ஷாட் ( knee shot )




            பங்கேற்கும் நடிகர்களை முழங்கால் வரை காட்டுவது.

      க்ளோஸ் அப்




            அருகில் காட்டுவது.முக்கியமான பெயர் பலகைகள்,எண்கள்,ஆபரணங்கள் மற்றும் முக பாவங்களை அருகி காட்ட பயன்படும் ஷாட் வகை.

     டைட் க்ளோஸ் அப்




             மிக அருகில் காட்டப்பயன்படும் ஷாட் வகை.மிக முக்கியமான முக பாவங்களை காட்ட பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.

       எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப்










             மிக மிக அருகில் காட்டுவதற்கு பயன்படுவது.உதாரணமாக ஒரு நீர்த்துளி,குண்டூசியின் முனை இப்படி மிக நுணுக்கமான விசயங்களை திரை முழுக்க பார்த்து பார்வையாளன் பரவசப்படுவதற்காக இந்த ஷாட் வகைகளை பயன்படுத்துவர்.

         ஃப்ரொஃபைல் ஷாட்


               நம்மூர்ல இதுக்கு பேர் சைடு போஸ்.

        சஜஷன் ஷாட்




               இரண்டு நடிகர்கள் இருக்கும் போது,ஒரு நடிகருக்கு பின்னால் இருந்து படம் பிடிப்பது.அதாவது அந்த நடிகர்களை தாண்டி வேறு ஒரு நபரால் கண்காணிக்கப்பட்டதுபோல் இருக்கும்.
    
               என்ன நண்பர்களே ஷாட் வகைகளை பார்த்துவிட்டொம்.இனி நீங்க உங்க ஒளிப்பதிவாளர்கிட்ட உங்களுக்கு என்னமாதிரி ஷாட் வேணும்னு சரியா சொல்லிடுவீங்கள்ல
     
     

நண்பர்களே வணக்கம்!
        ஷாட் வகைகள் உங்களுக்கு மிகவும் பயன் தருவதாக இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.அடுத்து மிகவும் முக்கியமான ஒன்று கோணங்கள்.இவை மனித உளவியலுடன் தொடர்புடையவை.
        நண்பர்களே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்,என்னடா ஒளிப்பதிவாளர் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களை நமக்கு தருகிறார் என்று,ஆனால் இப்பொழுது நாம் ஆராய்ந்துகொண்டிருக்கும் விசயங்கள் ஒரு இயக்குனரின் நாடி துடிப்பு.இது உங்கள் பார்வையாளனின் நாடித்துடிப்பை உங்கள் கைகளுக்குள் வைத்துக்கொள்ளும் அற்புதக்கலை!
        கோணங்களை பார்த்துவிடுவோமா,



      கண்மட்டக்கோணம்






         இது நடிகர்களின் கண்களுக்கு நேராக கேமராவை வைத்து (அதாவது கேமராவின் லென்ஸ்)படம் பிடிக்கும் முறை. நாம் ஒரு நபரை நேருக்கு நேர் நின்று பார்த்து பேசுவது போல் இருக்கும்.


இடுப்பு மட்ட கோணம்
நடிகர்களின் இடுப்பு மட்டத்தில் கேமராவை வைத்து படம்பிடிக்கும் கோணம்.









த‌ரை மட்ட கோணம்








கேமராவை தரை மட்டத்தில் வைத்து படம் பிடிக்கும் முறை.






தாழ்மட்ட கோணம்






கேமராவை மிகவும் தாழ்ந்த்த கோணத்தில் வைத்து படம் பிடிக்கும் முறை.இப்படி படம் பிடிக்கப்படும் காட்சிகள் மிகவும் பிரம்மிப்பாக இருக்கும்.



உயர்மட்ட கோணம்


கேமராவை உய‌ர்ந்த இடத்தில் வைத்து படம் பிடிக்கும் முறை.இதில் காட்சிகள் மிகவும் தாழ்வாக தெரியும்.இதுக்கு டாப் ஆங்கிள்னு இன்னொரு பெய‌ரும் உண்டு.













கழுகுப்பார்வை கோணம்




இதற்கு ஹெலிகாப்டர் ஷாட் என்ற‌ இன்னொரு பெயரும் உண்டு.பரந்த நிலப்பரப்புகளை படம் பிடிக்க உதவும் கோணம்.ஏரியல் ஷாட் என்ற மற்றொரு பெய‌ரும் உண்டு.





















இப்படி ஜிம்மி ஜிப் க்ரேன் பயன்படுத்தியும் உயர்மட்ட மற்றும் தாழ்மட்ட கோணங்களில்படம் பிடிக்கலாம்.   

நண்பர்களே வண‌க்கம் !
   ஷாட் மற்றும் கோணங்களை பற்றி பார்த்தோம்,இவைகளுடன் தொடர்புடைய மற்றொரு விசயமும் உள்ளது,அதுதான் கேமராவின் நகர்வு.
    கேமராவை பலவிதமான நகர்வுகளுக்கு உட்படுத்தலாம், இது திரைக்கதையின் வேகத்தையும், பார்வையாளனையும் ஒருமுகப்படுத்தும் ஒரு மந்திரப்புள்ளி.அதே சமயம் தேவையற்ற நகர்வுகளை தவிர்த்துவிட வேண்டும். கேமராவை ஏன் நகர்த்தவேண்டும் என்ற கேள்வி உங்க‌ளுக்குள் எழுந்தால் அது மிகவும் சரி.உதாரணமாக நீங்கள் ஒரு ரயில் நிலையத்தில் நிற்பதாக வைத்துக்கொள்வோம், இப்பொழுது நீங்க‌ள்தான் கேமரா சரியா, ரயில் நிலயத்திற்குள் ரயில் நுழைவதை பார்க்கிறீர்கள் இப்பொழுது அவசியமின்றி நீங்கள் நகர்வீர்களா மாட்டீர்கள் தானே இதுக்கு பேர்தான் ஸ்டெடிப்ளாக்,என்னடா கேமாரா நகர்தலப்பத்தி சொல்றேனுட்டு நகராம நிக்கரத பத்தி சொல்றேனேனு நினைக்க வேண்டாம் இதையும் இந்த பிரிவுலதான் சேர்க்க முடியும்.

ஸ்டெடிப்ளாக்

இப்படி கேமரா ஆடாம அசையாம இருந்தா அதுதாங்க ஸ்டெடி ப்ளாக்


ட்ரை பாட் ல பொருத்திட்டு பேசாம நிக்க வேண்டிய‌துதான்


பானிங்


கேமராவை இடமிருந்து வலமாகவோ, வல‌மிருந்து இடப்புறமாகவோ நகர்த்துவதுதான் பான்.கேமரா ஒரே அச்சில் சுழலும்விதமாக ட்ரைப்பாடில் பொருத்தப்பட்டிருக்கும்.
மீண்டும் நம்ம ரயில் நிலய கதைக்கு வருவோம், நகரும் ரயிலை உங்களது தலையை திருப்பி பார்ப்பதை போன்றது இந்த கேமரா நகர்வு.இடப்புறமா திரும்பினா பான் லெஃப்ட், வல‌ப்புறமா திரும்பினா பான் ரைட்.



ஆங்... அப்புடியே மெதுவா திருப்பவேண்டியதுதான்...!


திருப்பிட்டம்ல... எப்பூடி...!


இப்ப நீங்க ரயில்கூடவே ஒடுறீங்க, ரயில் மட்டும் தெளிவா இருக்கும் மத்தவங்க நகருவாங்க, இதுதான் ட்ராவல் ஷாட்.பொதுவா ட்ராலில கேமராவ பொருத்தி படம் புடிப்பாங்க.

இத ட்ராக் அண்ட் ட்ராலி னு சொல்லுவாங்க‌


இதுக்கு பேர்தான் டாலி

இதுக்கு ட்ராக்கிங் ஷாட் னு இன்னொரு பெயரும் இருக்கு.ரயில் தண்டவாள‌ம் மாதிரி ட்ராக் போடாம, காத்தடிச்ச டயர் பயன்படுத்தப்படும் அமைப்புக்கு டாலி னு பேர். இத சமதள பரப்புகள்ல படம் பிடிக்க பயன்படுத்தலாம் .


டாலி இன்


கேமராவ மெதுவா முன்னோக்கி நடிகர நோக்கி, அல்லது ஒரு பொருள நோக்கி நகர்த்தினா அதுக்கு பேர் டாலி இன் ஷாட்.

டாலி அவுட்


கேமராவ மெதுவா பின்னொக்கி நகர்த்தினா அது டாலி அவுட் ஷாட்.இந்த மாதிரி கேமரா நகர்வுகள் பார்வையாளனின் உணர்வுகளை தூண்டக்கூடியவை. க்ரேன்ல கேமராவ பொருத்தியும், இதே மாதிரி ஷாட்டுகள எடுக்க முடியும்.

இதே போன்ற மற்றொரு நகர்வும் உள்ளது அதுதான் சூம் இன், மற்றும் சூம் அவுட்.இதுக்கு ட்ராலி, டாலி, க்ரேன் எல்லாம் தேவை இல்ல.சூம் லென்ஸ பயன்படுத்தியே முன்ன பின்ன நகர முடியும்.ஆனா இதுல ஒரு பிரச்சினை இருக்கு, நடிகர் உங்களுக்கு அருகில் வருவதற்கு பதில், உருப்பெருகம் அடைவார் அவருடிய பின்புலத்துடன் சேர்ந்து.அதே பொல் சூம் அவுட் செய்தால், பின்னோக்கி செல்வதற்கு பதில் உருவம் சிறியதாகிவிடும், பின்புலத்துடன் சேர்ந்து.

அப்படியே இத சூம் பண்ணிக்கோப்பா...!
அதனால தேவை ஏற்பட்டா மட்டும் இந்த முறையை கையாள வேண்டும்.

கேமராவ தொள்ல தூக்கி படம் பிடிக்கும் முறைக்கு ஸ்டெடிகேம் னு பேரு.இத கேமராமேன் முன் பின்னாகவோ, வலம் இடமாகவோ நகர்ந்து படம் பிடிக்கலாம்.வல‌ம் இடமா நகர்வதற்கு க்ராப் மூவ்னு பேரு. க்ராப் அபிடின்னா நண்டு.இது நண்டு நகர்வது மாதிரி இருக்கறதால இந்த பேரு. இத க்ராப் லெஃப்ட்க்ராப் ரைட் அப்டின்னு ரெண்டுவிதமான பேர்ல அழைப்பாங்க.


ஸ்டெடிகேம் 











க்ரேன் அப்






கேமராவை க்ரேனில் பொருத்தி மேலே தூக்கும் நகர்வு முறை.



க்ரேன் டவுன்


கேமராவை க்ரேனில் பொருத்தி கிழே இறக்கும் நகர்வு முறை.
பெடஸ்டல் அப்பெடஸ்டல் டவுன் அப்டினு ரெண்டு நகர்தல் இருக்கு.

பெடஸ்டல் அப், பெடஸ்டல் டவுன்

 இதுவும் க்ரேன் அப், டவுன் மாதிரிதான், ஆனா செங்குத்தா மேலே ஏறும், இறங்கும். அதாவது லிஃப்ட்மாதிரி.



கேமரா நகர்வில் முக்கியமாககவனிக்க வேண்டியது


  •       கதாப்பாத்திரம் நகர்வது




  •        கதாப்பாத்திரத்தின் பார்வயில் மற்றொருவர் நகர்வது




  •        கதாபாத்திரமும், மற்றொரு கதாபாத்திரமும் சேர்ந்து நகர்வது



இதுமட்டுமல்லாது, தேவையற்ற கேமரா நகர்வை தவிர்த்துவிட வேண்டும்.
  
       இதுவரை நாம் எளிமையாக பார்த்த விசய‌ங்ளை ஒரு இயக்குனர் அறிந்து வைத்து இருந்தால்தான் திரைக்கதை எழுத முடியும், திட்டமிட முடியும்.

நண்பர்களே வணக்கம் !
   கேமரா நகர்வுகள் பற்றி பார்த்தோம், இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும். அடுத்து ஒரு காட்சி எவ்வாறு அமைகிறது என்று பார்த்துவிடலாம்.
   நாம் படம் பிடிக்க விரும்பும் காட்சி அருகில் இருக்க வேண்டுமா, தொலைவில் இருக்க வேண்டுமா, கேமரா எப்படி நகரவேண்டும் அல்லது நக‌ராமல் நிற்கிறதா, இரவில் நடக்கும் காட்சியா, பகலில் நடக்கும் காட்சியா, அந்த சூழலில் கதையோடு தொடர்புடையவர்கள், சூழலுக்கு மட்டும் தொடர்புடையவர்கள், பின்னணி ஒலிக்குறிப்புகள் இப்படி இதுவரை நாம் பார்த்த த‌கவல்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் காட்சி.
    இதில் கேமராவின் கோணம், ஷாட் வகை மற்றும் கேமராவின் நகர்வு இவைகள் மூன்றும் ஒரு காட்சியை மேம்படுத்தும் முக்கிய காரணிகள். இவற்றிற்கு ஒரு முக்கோண தொடர்பு உண்டு.அதாவது ஒன்று மற்றொன்றை பாதிக்கும்.
    அதனால் திரைக்கதைக்கு ஏற்றவாறு இவற்றை தேர்வு செய்ய வேண்டும்.ஒரு காட்சியை அழகூட்டுவதும், சிதைப்பதும் இவைகள்தான்.
    காட்சி என்றால் என்ன என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம், அந்த அளவுக்கு மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது நம்மவர்களிடம். பொதுவா காட்சிய‌ சீன் அப்டின்னு சொல்லுவோம்.ஒரே ஒரு ஷாட் மட்டுமே ஒரு சீனாக இருக்கலாம் அதே போல ப‌ல்வேறு ஷாட்கள் சேர்ந்தும் ஒரு சீனா அமையலாம். குழப்பம் இதுல கம்மிதான் அடுத்து வருவதுதான் பெருங்குழப்பம்.

   நீங்கள் ஒரு காட்சியை வீட்டின் உள் ஆரம்பித்து வெளியில் முடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அது ஒரே காட்சியா அல்லது இரண்டு காட்சிகளா ? இதில்தான் குழப்பம்.
   நம்மவர்கள் இதை ஒரே காட்சி என்று சொல்வார்கள், ஹாலிவுட்காரர்களுக்கு இது இரண்டு காட்சிகள் எப்படி, கேமராவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றிவிட்டால் அது வேறு ஒரு காட்சியாக கணக்கில் கொள்ளபடும். இங்கே நான் இடம் என்று குறிப்பிடுவது லொகேஷனை, அதாவது உள்ளே படம் எடுப்பது காட்சி 01, வெளியே படம் எடுப்பது காட்சி 02 அதாவது சீன் 02.
   அடுத்து இரவு, பகல். உங்கள் கதையில் ஒரு கதாப்பாத்திரம் பேருந்தில் பயணம் செய்வதாக வைத்துக்கொள்வோம், இரவு பேருந்து கிளம்புகிறது பகலாகும் வரை பேருந்து பயணிக்கிறது இதில் கேமரா தனது இடத்தை மாற்றிக்கொள்ளாமல் பேருந்துக்குள்தான் இருக்கிறது இது கதையை பொறுத்தவரை ஒரே காட்சிபோல்தான் இருக்கிறது. நம்ம கோடம்பாக்கத்தில் இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரே காட்சிதான். ஆனால் ஹாலிவுட்டில் இது இரண்டு வெறு காட்சிகள்.பேருந்து கிளம்புவது இரவு அதனால் அது சீன் 01, பகலில் தொடர்ந்து பயணிக்கிறது சீன் 02.
    கேமராவில் படப்பதிவை நிறுத்திவிட்டு மிண்டும் தொடற்வதற்குதான் இந்தமுறை, படம் பிடித்துக்கொண்டே வேறு இடத்திற்கு நகர்ந்தால் இது ஒரே சீன் தான். என்ன குழம்புகிறதா இன்னும் எளிமையா பாத்துறலாம்.

    இப்ப நாம மேல பாத்த விசயத்தையே எடுத்துக்குவோம்

    ஒருத்தன் வீட்டுக்குள்ள இருந்து கிள‌ம்பறான்

    வெளில நடக்கறான்

    பேருந்தில அமர்கிறான்

    விடிய விடிய பயணிக்கிறான்


 
  இதுல‌ கேமராவ நிறுத்தாம படம் புடிச்சுக்கிட்டெ அந்த கதாப்பாத்திரத்த தொடர்ந்தா அது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரே சீன்.சரியா, நல்லது.
    இதே விசயத்த‌

     ஒருத்தன் வீட்டுக்குள்ள இருந்து கிள‌ம்பறான்

                      க‌ட்

             வெளில நடக்கறான்

                      க‌ட்

            பேருந்தில அமர்கிறான்

                      க‌ட்

         விடிய விடிய பயணிக்கிறான்

                      க‌ட்

         இப்படி கேமரா படம் பிடிப்பத நிறுத்தி உள்ளே, வெளியே, இரவு, பகல்னு மாறும்போது வெறும் ஒவ்வொறு ஷாட் படப்பிடிப்பு நடத்தினால் கூட அது ஒரு தனிப்பட்ட சீன்தான்.
         கப்புனு புடிச்சிக்கிட்டீங்களா, அடுத்த சீன்ல பார்ப்போம்...!                

வணக்கம் நண்பர்களே,
காட்சிப்பற்றி பர்த்தோம், அடுத்து மிக முக்கியமான ஒன்று காட்சித்தொடர். அதாவது ஒரு காட்சி ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை இடம்பெற‌க்கூடிய ஷாட்டுகளின் தொடர் வரிசை என்று கூறலாம்.









  உதாரணமாக ஒரு சீனில் நாயகன் வீட்டிலிருந்து நாயகியை பார்க்க கிளம்புகிறான் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அவன் என்னென்ன செய்வான் என்பதுதான் அந்த சீனின் தொடர் அதாவது ஆங்கிலத்தில் ஸீன் ஸீக்வன்ஸ்,அதை பார்த்துவிடுவோமா

பாத்ரூமில் பாடும் சத்தம் கேட்கிறது
கதவு திறக்கிறது
வெளியில் துண்டுடன் வருகிறான்
உடை உடுத்துகிறான்
தலை சீவுகிறான்
பாடி ஸ்பிரே அடித்துக்கொள்கிறான்
முகத்தை கண்ணாடியில் பார்த்து உதட்டை ஈரப்படுத்துகிறான்
ஷூவை மாட்டுகிறான்
சாவியை எடுக்கிறான்
வெளியில் வருகிறான்
வண்டியை கிளப்புகிறான்
வண்டி சீறிப்பாய்கிறது

ஒரு ஸீனில் இடம்பெறும் ஷாட்டுகளின் வரிசைக்கிரமமான தொடர்தான் ஸீன் ஸீக்வன்ஸ்.ஒரு சீட்டுக்கட்டில் வரிசையாக கார்டுகளை அடுக்கி வைப்பதைப்போன்றது.மாற்றி அடுக்கினால் வரிசை மாறும், அதே போல் ஷாட்டுகளை மாற்றி அடுக்கினாலும் குழப்பம் வரும், அடுத்து பாருங்க புரியும் !


பாத்ரூமில் பாடும் சத்தம் கேட்கிறது
கதவு திறக்கிறது
உடை உடுத்துகிறான்
தலை சீவுகிறான்
பாடி ஸ்பிரே அடித்துக்கொள்கிறான்
முகத்தை கண்ணாடியில் பார்த்து உதட்டை ஈரப்படுத்துகிறான்
வெளியில் துண்டுடன் வருகிறான்
ஷூவை மாட்டுகிறான்
வண்டி சீறிப்பாய்கிறது
சாவியை எடுக்கிறான்
வெளியில் வருகிறான்
வண்டியை கிளப்புகிறான்

பாத்தீங்களா, குழப்பமா இருக்கு இல்லீங்களா. திரக்கதை எழுதும்போது ஒரு சீனை உருவாக்க இந்தஸீன் ஸீக்வன்ஸ் உதவும் அதுமட்டுமில்லாம ஒட்டுமொத்த கதை உருவாகவும் இந்த ஸீக்வன்ஸ் அவசியம்.

தொடருக்கும், தொடர்ச்சிகும் வித்தியாசம் இருக்கிறது. தொடர் என்பது ஸீக்வன்ஸ், தொடர்ச்சி என்பது கன்டினியூட்டி...
தொடர்வோம் நண்பர்களே...!

வணக்கம் நண்பர்களே,
ஸீன் ஸீக்வன்ஸ் பற்றி பார்த்தோம், அடுத்து கன்டினியூட்டி பற்றி பார்த்துவிடுவோம். ஒரு படத்திற்கு கண்டினியூட்டி என்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு விசயத்திலும் இதை நாம் பார்க்கலாம். உதாரணமாக உங்கள் படத்தின் கதானாயகன் ஒரு பேருந்தில் பயணிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் சிவப்பு நிற சட்டை அணிந்து இருக்கிறான், பிறகு அவன் வீதியில் நடந்து வருகிறான், வீட்டிற்குள் நுழைகிறான். இது காட்சி. இதில் வீட்டிற்குள் நுழையும்போது சிவப்பு நிற சட்டைக்கு பதிலாக ஊதா நிற சட்டை அணிந்து இருந்தால் பார்வையாளனுக்கு குழப்பம் வரும் அல்லவா, இதைத்தான் கண்டினியூட்டி என்று சொல்வார்கள்.
ஒரு சலனப்படத்தை உருவாக்கும் போது இப்படி பல்வேறு கண்டினியூட்டிகளை நாம் சரி பார்க்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் மிகப்பெரிய குழப்பம் உருவாகிவிடும். உடை, வசனம், அரங்கத்தில் பங்கேற்கும் பொருட்கள் அதாவது செட் ப்ராப்பர்ட்டி, நடிகர்கள் நிற்கும் இடம், உடல்மொழி, பார்க்கும் பார்வை கோணம், இசை, ஒப்பனை, சிகை அலங்காரம், அணிகலண்கள் இப்படி ஒவ்வொன்றிலும் கூர்மையாக கண்டினியூட்டி பார்க்கவேண்டும்.
அடுத்து கேமரா கோணம், ஃப்ரேமின் அளவு, கேமராவின் இயக்கம், பயன்படுத்தப்படும் லென்ஸ், பின்னணி அதாவது பேக் ட்ராப், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் துணை நடிகர்கள் இப்படி தொழில் நுட்பம் சார்ந்த மற்றும் சாராத அத்தனை விசயங்களிலும் கண்டினியூட்டி பார்க்கவேண்டும்.

இவைகள் படத்தொகுப்பு செய்யும்போதுதான் தெரியும். அங்குதான் கண்டினியூட்டி மிஸ் ஆகிறது என்ற வர்த்தையை அடிக்கடி கேட்கமுடியும். நீங்கள் கண்டினியூட்டி கற்றுக்கொள்ளவேண்டும் என்றால், எடிட்டிங் செய்யும் இடத்திற்கு நீங்கள் செல்லும் வாய்ப்பிருந்தால் தயவு செய்து சென்று பாருங்கள். கண்டினியூட்டியின் சூட்சுமம் புரிந்துவிடும்.
அதனால்தான் ஒரு இயக்குனர் மிகவும் சர்வ ஜாக்கிரதையுடன் செயல்படவேண்டும். இதில் 180 டிகிரி ரூல் என்று ஒன்று இருக்கிறது,லைன் ஆஃப் விஷன்  என்று வேறொரு பெயரும் உண்டு. இதுவும் கண்டினியூட்டி தொடர்பான விசயம்தான். அது என்னன்னா ஒரு முழு வட்டத்தை பாருங்கள் அதை 360 டிகிரி என்று கணிதத்தில் குறிப்பிடுவர்கள். இந்த ஒரு முழுவட்டத்தின் பாதி அரை வட்டம்,




இதை 180 டிகிரி என்று குறிப்பிடுவர். 360 ல் பாதி 180 சரியா. அவ்ளோதாங்க நீங்க படம் புடிக்கும்போது உங்க கேமரா ஒரு அரை வட்டத்தின் அளவிற்குதான் பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்டினியூட்டி பிரச்சினை வரும் எப்படி ?







படம் பார்க்கும்போது திரையின் இடப்புறத்தில் இருந்து வலப்புறம் நோக்கி பார்த்துக்கொண்டிருந்த உங்க கதாப்பாத்திரம் திடும்னு திரையின் வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும், பார்க்கும் பார்வையாளனுக்கு குழப்பம் தொற்றிக்கொள்ளும். உங்களுக்கு இப்போ ஒரு பெரிய சந்தேகம் வரும், அரை வட்டம் அடித்தால் மட்டும் இந்தப்பிரச்சினை வராதா என்று, கண்டிப்பா வரும் அதை தவிர்க்கனும்னா ஒரு கதாப்பாத்திரம் பார்க்கும் பார்வைக்கு நேராக ஒரு கற்பனை கோட்டை வரைந்துகொள்ளுங்கள் அந்த கற்பனைக்கோட்டை உங்கள் கேமரா தாண்டாதவரை கண்டினியூட்டி பிரச்சினை வரவே வராது.







இரண்டு கதாப்பாத்திரங்கள் இருந்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் இப்போ உங்களுக்கு வரவேண்டும், இருவரும் நேருக்கு நேராக பார்த்து அமர்ந்திருந்தால், உங்களது கேமரா ஒருவரின் வலதுபுறத்திலிருந்து மற்றொருவரின் இடப்புறம் வரை செல்லலாம் அதாவது 180 டிகிரி வரை.
சரி மூன்று கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றால் என்ன செய்வது, இங்கும் 180 டிகிரி அரைவட்டத்தை கேமரா தாண்டாதவரை நல்லது இருப்பினும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு பதிலாக கேமராவை பயன்படுத்தலாம்,












 அப்பொழுது மூன்று கதாப்பாத்திரங்களுக்கு பதிலாக திரையில் இரண்டு பேர்தான் தெரிவார்கள், ஒருவருக்கு பதிலாக கேமரா இருக்கும், குழப்பம் வராது.
ஐந்து பேர் அல்லது பத்து பேர் பங்கேற்கும் காட்சியிலும் இதேபோல்தான் ஆனால் இதில் 180 டிகிரியிலும் குழப்பம் வரும்.



அதனால் ஒரு கதாப்பாத்திரத்திற்கு பதிலாக கேமராவை பயன்படுத்துவது அந்த கதாப்பாத்திரத்தின் பார்வைக்கோணத்திலிருந்து படம் பிடிப்பதால், அந்த கதாப்பத்திரம் பர்ப்பது போல் இருக்கும்





 ஆகவே குழப்பம் வராது.
இதில் 180 டிகிரி ரூலை மீறும் விசயம் ஒன்று இருக்கிறது, அது கேமராவை நிறுத்தாமல் மெதுவாக முழு வட்டம் அடிப்பது. அதாவது 360 டிகிரி முழு வட்டத்தில் கேமராவை வட்டம் அடிப்பது.
இனி நீங்கள் ஏதாவது ஒரு நல்ல ஆங்கிலப்படத்தை பாருங்கள். என்ன படம் பார்க்கலாம் ம்..ம்.., க்ளேடியேட்டர் பாருங்கள் மிக அற்புதமான படம் அற்புதமான பாடமும் கூட....!
பார்த்துவிட்டு கேளுங்கள் நண்பர்களே....., பதில் சொல்ல வாஞ்சையுடன் காத்திருக்கிறேன்...!